இன்று ஈரோடு விஜயமங்கலத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம்.

by Admin / 18-12-2025 03:15:45am
இன்று ஈரோடு விஜயமங்கலத்தில்  விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம்.

இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே விஜயபுரி அம்மன் கோவில் திடலில் காலை 11.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது. கடந்த செப்டம்பரில் கரூரில் நடந்த கூட்டத்திற்கு பிறகு புதுச்சேரியில் பொதுவெளியில் பேசிய விஜய் ...தமிழகத்தில் 81 நாட்களுக்கு பின் மீண்டும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இக்கூட்டத்தில் 35,000 பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை 84 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இக்கூட்டத்திற்கு விஜய் தனி விமான மூலம் கோயமுத்தூர் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மக்கள் சந்திப்பு நிகழ்வுறும்  திடலுக்கு வருகிறார். இக்கூட்ட பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  24 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via