மருத்துவர் மீது பொய் வழக்கு பதிவு:கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம்.-திருநெல்வேலி டிஐஜி.

by Editor / 25-05-2024 10:55:55pm
மருத்துவர் மீது பொய் வழக்கு பதிவு:கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம்.-திருநெல்வேலி டிஐஜி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் கடந்த 2013ம் ஆண்டு நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி கொண்டு இருந்த போது,, தனியார் மருத்துவமனை பிரச்சினை தொடர்பாக  மருத்துவர் பெருமாள் என்பவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக  வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வரும் 31ந்தேதி காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார் ஓய்வு பெற இருந்த நிலையில், திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ்குமார்  பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : திருநெல்வேலி டிஐஜி

Share via

More stories

Logo