by Staff /
10-05-2023
12:00:29pm
டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல கேங்ஸ்டர் சுனில் மன் என்கிற தில்லு தாஜ்பூரியா ஆள் கடத்தல், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தில்லு தாஜ்பூரியா தொடர்புடையவர். கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தாஜ்பூரியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார்.கடந்த 2ஆம் தேதி அதிகாலை திஹார் சிறைக்குள், பிரபல கேங்ஸ்டர் ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளுக்கும், தில்லு தாஜ்பூரியாவின் கூட்டாளிகளுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இரும்புக் கம்பிகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். அப்போது தனியாக சிக்கிய தில்லு தாஜ்பூரியாவை, ஜிதேந்தர் கோகியின் கூட்டாளிகளான யோகேஷ், தீபக் தீத்தர் ஆகிய இருவரும் சேர்ந்து இரும்புக்கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொன்றனர்.உடல் முழுக்க படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சுயநினைவை இழந்த தாஜ்பூரியாவை, சிறைக் காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை தனிச்சிறையில் வைத்து சிறைக்காவலர்கள் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லி ரோகினி நீதிமன்றம் முன்பாக பிரபல கேங்ஸ்டர் ஜிதேந்தர் கோகி துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
Tags :
Share via