தென்காசி அருகே கஞ்சா மற்றும் அரிவாளுடன் பிரபல ரவுடி கோழி அருள் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த கோழி அருள் என்கின்ற பிரபல ரவுடி இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக இரவில் மதுரையிலிருந்து சுரண்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது போலீசாரக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பங்களா சுரண்டை பகுதியில் அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து சோதனை இட்டபோது
அவரிடம் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் பெரிய அரிவாள் ஒன்று இருப்பதும் தெரிய வந்தது.
உடனடியாக கோழி அருளை கைது செய்த ஆய்வாளர் ஹரிஹரன் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தார்.
பிரபல ரவுடி கையில் ஆயுதம் மற்றும் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Tags : தென்காசி அருகே கஞ்சா மற்றும் அரிவாளுடன் பிரபல ரவுடி கோழி அருள் கைது