10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..!!

by Admin / 26-07-2021 02:45:43pm
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..!!

 


 
பஞ்சாபில் நீண்ட நாள் இடைவெளிக்கு பின் 10 முதல்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா 2வது அலைக்கு பின்,  நாடு முழுவதும் தொற்று பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால்,  மாநிலங்கள் வாரியாக ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பஞ்சாபிலும் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, கல்வி நிறுவனங்களை திறக்க பஞ்சாப் அரசு முடிவு செய்து அறிவித்தது.

 அதன்படி இன்று முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி திரும்பியுள்ளனர்.

அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதை அந்தந்த பள்ளி நிர்வாகம் உறுதி செய்து வருகிறது. முதற்கட்டமாக பெற்றோர் அனுமதியுடன் பள்ளி வர விரும்பும் மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்குள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo