மீண்டும் சிறைக்கு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

by Staff / 02-06-2024 03:56:12pm
மீண்டும் சிறைக்கு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்

மே 10ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரணடைய சென்றுள்ளார். ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் அவர் சரணடையுமாறு கூறப்பட்டிருந்தது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கஹ்லோட் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் ராஜ்காட்டில் இருந்து புறப்பட்டனர்.

 

Tags :

Share via