பிகாரில் போலி மது அருந்திய 16 பேர் பலி; 5 பேர் கைது
பிகார் மாநிலம், லவ்ரியா காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 16 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மோப்ப நாயை வரவழைத்து அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில துணைமுதல்வர் ரெனு தேவி கூறுகையில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உள்ளூர் மக்கள் இதுதொடர்பாக எந்த தகவலும் இதுவரை அளிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றார்.
அதேசமயம் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், போலி மதுபானம் காரணமாக யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதனை மறைக்க வேண்டாம். உடனடியாக மருத்துவக்குழுவினருடன் தெரித்தால் அவர்கள் குணப்படுத்திவிடுவார்கள் என்றார்.
Tags :