சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

2018 - 2021 அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணை நடத்தக்கோரி வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு குறித்து ஊழல் கண்காணிப்பு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
Tags :