நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா.
நேபாளம் காத்மண்டில் நடந்த சமூக ஊடக முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் பந்து தோட்டாக்களை வீசியதில் 19 பேர் இறந்ததை அடுத்து அங்கு அமைதியின்மையும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் சிலர் பெரும்பான்மையான இளைஞர்கள் தடுப்பு வேலியை உடைத்து நுழைந்து வாகனங்களுக்கு தீ வைத்ததோடு காவலர்கள் மீதும் கற்களையும் பொருட்களையும் வீசியதில் 28 போலீசார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமூக ஊடக தளங்களை தடுப்பதற்காக கடந்த வாரம் அரசாங்கம் எடுத்த முடிவின்படி இளைஞர்களிடையே மிகப்பெரிய ஒரு கோபத்தை உருவாக்கியதில் இந்த போராட்டச் சூழல் உருவானது. நேபாளத்தில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையான மூன்று கோடியில் 90 விழுக்காட்டினர் சமூக ஊட தளத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதுபலர் காயமுற்றனர். இதன் காரணமாக போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தேறியது. போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
Tags :



















