தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு  காவல் ஆணையர்கள் நியமனம் 

by Editor / 01-10-2021 04:25:08pm
தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு  காவல் ஆணையர்கள்  நியமனம் 


சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி ரவி ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சென்னை நகரத்தின் காவல் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்றும் அதன்படி தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரங்கள் புதிதாக உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் கடந்த 13ம் தேதியன்று அறிவித்தார்.


தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும், ரயில்வே பாதுகாப்புப் படையின் கூடுதல் டி.ஜி.பி-யான கூடுதல் பொறுப்பு வகித்து வரும் சந்தீப்ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.


தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி-யாக உள்ள ரவி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர்கள் கமிஷனர்களாக பொறுப்பேர்ப்பார்கள் எனவும் அதுவரை சிறப்பு அதிகாரிகளான இவர்கள் காவல் மாவட்டங்கள் மற்றும் காவல் நிலையங்கள் பிரிக்கப்படுவது பற்றி டி.ஜி.பி, சென்னை காவல் ஆணையர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-க்களுடன் கலந்தாலோசனை நடத்தி முடிவு செய்வார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.

 

Tags :

Share via