கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு ரூபாய் 1.60 லட்சம் மின் கட்டணம் பில்

by Staff / 06-05-2022 02:12:53pm
கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு ரூபாய் 1.60 லட்சம் மின் கட்டணம் பில்


வேலூரில் கூலி தொழிலாளியின் வீட்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டோபி கனா  பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கூலித்தொழிலாளி ராணி அம்மாள். இவரது வீட்டில் மூன்று பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில் வழக்கமாக 300 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வரும் என்று கூறப்படுகிறது. இம்மாத கட்டணம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பாய் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ராணி அம்மாள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தார் இதையடுத்து புதிய மீட்டரை பொருத்திய மின்வாரிய ஊழியர்கள் பழைய மீட்டரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo