சுத்தமான காற்றை சுவாசிக்க திருநெல்வேலிக்கு வாங்க.
இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று தர குறியீடு ஆய்வில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வேலி முதலிடம் பெற்றுள்ளது.இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த சான்றிதழை வெளியிட்டுள்ளது.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான சமீபத்திய காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை ஜனவரி 9, 2025 அன்று வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் இரண்டாவது இடத்தையும் கர்நாடகாவின் மடிக்கேரி பகுதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. நமது தமிழகத்தின் தஞ்சாவூர் ஐந்தாவது இடத்தில் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது: கர்நாடகாவின் கப்பல் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மற்றும் கேரளாவின் கண்ணூர் நகரமும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.காற்றின் தரம் மிக மிக மோசமாக இருக்கும் நகரத்தில் முதல் இடத்தை இந்திய தலைநகரான புது டெல்லி பிடித்துள்ளது. மோசமான காற்று தரம் உள்ள இரண்டாவது இடமாக உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தும் மூன்றாவது இடத்தினை மேகாலயாவின் பிரின் ஹேட் நகரமும் பிடித்துள்ளன: சண்டிகர் உத்தர பிரதேசம் ஜார்க்கண்ட் ஹிமாச்சல் பிரதேசம் மகாராஷ்டிரா ஆகியவை காற்றின் தரம் மோசமாக உள்ள முதல் 10 மாநில பட்டியலில் இடம் பிடித்துள்ளது :
Tags : சுத்தமான காற்றை சுவாசிக்க திருநெல்வேலிக்கு வாங்க.