கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பலி.

by Staff / 30-12-2022 05:14:05pm
கிணற்றில் தவறிவிழுந்து மூதாட்டி பலி.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்த சூரப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி சுகந்தாதேவி இவர் அவரது தோட்ட பகுதியில் நேற்று காலை இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரை குடும்பத்தினர் அக்கம்பக்கம் தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் அங்குள்ள விவசாய கிணறு பகுதியில் மூதாட்டியின் ஊன்றுகுச்சி மற்றும் கைலைட் ஆகியவை கிடந்து தெரிய வந்தது இதனையடுத்து அவர் நீரில் மூழ்கி இருக்கலாம் என தேடிப் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்து வரவழைக்கப்பட்டு தேடினர். அப்போது கிணற்று நீரில் மூழ்கிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via