இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் - அமித்ஷா

by Staff / 24-04-2023 12:51:09pm
இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் - அமித்ஷா

தெலுங்கானாவில் இஸ்லாமிய இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தெலங்கானவின் செவெல்லாவில் நடைபெற்ற பாஜகவின் விஜய் சங்கல்ப சபாவில் பேசிய அவர், “ஓவைசியின் அதே நிகழ்ச்சி நிரலைத்தான் கேசிஆர் செயல்படுத்துகிறார். காரின் ஸ்டீயரிங் எம்ஐஎம் கையில் உள்ளது. இங்குள்ள அரசு தெலுங்கானா விடுதலை நாளுக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை. தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எந்த தேர்வு நடத்தினாலும் கேள்வித்தாள்கள் கசிந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

 

Tags :

Share via

More stories