வம்சி  இயக்கும் நடிகர் விஜய்யின் 66-வது படம்: 

by Editor / 27-09-2021 06:06:35pm
வம்சி  இயக்கும் நடிகர் விஜய்யின் 66-வது படம்: 


மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்து கொண்டிருந்தது. அந்தத் தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விஜய்யின் 66-வது படத்தைத் தானே இயக்கப்போவதாக இயக்குநர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
2007-ல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வம்சி. தமிழில் வெளியான தோழா உள்பட 5 படங்களை அவர் இயக்கியுள்ளார். 2019-ல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via