உலக சமூக ஊடக நாள் இன்று : ஜீன் 30

by Staff / 30-06-2025 06:38:37pm
உலக சமூக ஊடக நாள் இன்று : ஜீன் 30

மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருவது  சமூக ஊடகங்கள்.இவற்றை  பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.செல்போன்களால் நாட்டின் அவலங்களும் சில மறைமுக தகவல்களும் வெளிச்சத்திற்குவருவதற்கு சமூக வலைத்தளங்கள் முக்கியபங்காற்றிவருகின்றன.

உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பெரும் உதவியாக இருப்பது ஊடகங்கள். செய்திதாள்கள், தொலைக்காட்சிகளை விட சமூக ஊடகங்கள் மூலம் செய்திகள் விரைவாக மக்களை சென்றடைகின்றன. உலகின் எந்த  மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் புகைப்படம் அல்லது வீடியோவுடன் அடுத்த மூலைக்கு கொண்டு செல்வதற்கு சமூக ஊடகங்கள் உதவியாக இருக்கின்றன.

சமூக ஊடகங்கள் என்பவை இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக், டிண்டர் போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றில் லிங்டுஇன், வைன், ஸ்நாப்சாட் போன்றவை தொழில்ரீதியான சமூக ஊடகங்கள் ஆகும். இந்த காலத்தில் வாழும் மக்கள் வாழ்வில் சமூக ஊடகங்கள் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இது தொலைதூரத்தில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பேச உதவியாக உள்ளது. அவர்கள் பேஸ்புக், டுவிட்டர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்தும் போது நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காணலாம்.இந்நிலையில், சமூக ஊடகங்களை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுவதும் சமூக ஊடக நாள் கொண்டாடப்பட்டு வருகிறது


 

 

Tags : World Social Media Day Today: June 30

Share via