சென்னைக்கு திரும்ப 6,459 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

by Editor / 17-01-2024 09:44:45am
சென்னைக்கு திரும்ப 6,459 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் தொடர் விடுமுறைக்கு பிறகு மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 1,720 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,589 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்கு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் இருக்கவும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 

Tags : சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Share via

More stories

Logo