கோவையில் முதலமைச்சர் ஆய்வு

by Staff / 24-09-2023 02:11:49pm
கோவையில் முதலமைச்சர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கோவை விளாங்குறிச்சி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருப்பூரில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்திலும் இன்று மாலை கலந்துகொள்கிறார். திமுகவின் 14 மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo