by Editor /
10-07-2023
11:18:13pm
திருநெல்வேலிமாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உகந்தான்பட்டியை சேர்ந்த ராமஐயப்பன்(19) உட்பட மூன்று இளஞ்சிறார்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு பிரிவினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வசனத்துடன் இருக்கும் வீடியோ பதிவை அனைவரும் பார்க்கும்படி பதிவேற்றம் செய்துள்ளார்கள். மேற்படி சமூகவளைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது சீதபற்பநல்லூர் காவல் துறையினருக்கு தெரியவந்ததையடுத்து உதவி ஆய்வாளர் ரபினாமரியம் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Tags :
Share via