தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்தது.

by Editor / 04-08-2024 07:19:51am
தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்தது.

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வன பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2017 ன் படி, 2,761 ஆக யானைகள் எண்ணிக்கை, 2024 ஆம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.

 

Tags : தமிழ்நாட்டில்

Share via