ஆடிஅமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு புனிதஸ்தலங்களில் திரண்ட மக்கள் 

by Editor / 04-08-2024 07:18:12am
ஆடிஅமாவாசை  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு புனிதஸ்தலங்களில் திரண்ட மக்கள் 

 

அமாவாசை தினம் என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த நாட்களாக கருதப்படுகிறது.

 குறிப்பாக தை அமாவாசை  மற்றும் ஆடி அமாவாசை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.மேலும் இந்த அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களின்  பரிபூரண ஆசி கிடைக்கும்  என்று கருதப்படும் நிலையில்நீர் நிலைகள் உள்ள பகுதிகளான ஆற்றுப்பகுதி மற்றும் கடற்கரை பகுதியில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது  வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டுஇன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள  ஏராளமானோர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும்கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு  எள், மற்றும் தர்ப்பபுள், வைத்து,பிண்டம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு நான்கு முப்பது மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..


 சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண குவிந்த சுற்றுலா பயணிகள், பலத்த போலீஸ் பாதுகாப்பு.ஆடி அமாவாசை-  குமரி கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்.

தூத்துக்குடியில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி ஆயிரகணக்கான பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடி அமாவாசை முன்னிட்டு குற்றாலத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு அங்கு இருக்கும் வேத விற்பனர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அருவியில் புனித நீராடி சென்ற வண்ணம் உள்ளனர், காலை முதல் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. 

 

Tags : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு

Share via