தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது - இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி வந்துவிட்டது. புதுப்புது அறிவிப்புகளால் மக்களின் கோபத்தை குறைக்க முடியாது. 9 மாதங்களில் எப்படி 40,000 பணியிடங்களை நிரப்புவார்கள்? 3.50 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாக கூறி இதுவரை 50,000 மட்டுமே நிரப்பியுள்ளனர். டாஸ்மாக் வழக்கில் யாரெல்லாம் சிக்குவார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்றார்.
Tags :