"நிலமற்ற குடும்பங்களுக்கு மேலும் 5 லட்சம் பட்டாக்கள்" - அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நிலம் அற்ற குடும்பங்களுக்கு தமிழக அரசு பட்டாக்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது கூடுதலாக மக்களுக்கு பட்டாக்கள் வழங்க இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “நிலமற்ற ஏழை குடும்பங்களுக்கு விலையின்றி இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வரும் ஆண்டில் மேலும் 5 லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.
Tags :