போலீசாரை கண்டித்து தீக்குளித்த ஓட்டுநர்

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 29)இவர் 12 ஆம் தேதி இரவு குடிபோதையில் மினி லாரி ஓட்டி வந்ததாக்க கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து இவரது வாகனத்தை மறித்து சோதனை செய்த போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதில் கோபமடைந்த சந்தோஷ்குமார் அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து காவல்துறையினர் முன்பே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உடல் கருகினார்.அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags : The driver who condemned the police and set himself on fire