ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமல்.

by Editor / 03-07-2024 09:29:19am
ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமல்.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் இன்று (ஜூலை 3) முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணங்களை 12 சதவிகிதம் முதல் 21 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த கட்டண உயர்வால், ஆண்டுக்கு ரூ.650 வரை அதிகமாக செலுத்த நேரிடும். வோடபோன் ஐடியா நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், நாளை (ஜூலை 4) முதல் அமலுக்கு வருகிறது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டும் கட்டணங்களை குறைத்து பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் 4ஜி சேவை அதிக வேகத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

 

Tags : ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமல்.

Share via