அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு 6ம் தேதி ஒத்திவைப்பு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு மனு மீதான விசாரணை வரும் நவம்பர் டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4. 90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14. 05. 2001 முதல் 31. 03. 2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ. 6. 50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இன்று அவர் விடுமுறை என்பதனால் நீதிமன்ற பணிகளை 2வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிலிஃப்ஸ் நிக்கோலஸ் கவனித்து வந்தார். அவர், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை வரும் டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags :