மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகிறதா

by Staff / 24-09-2022 02:28:38pm
மதுரை எய்ம்ஸ்-ல் சிகிச்சைகள் நடைபெறுகிறதா

மதுரை எய்ம்ஸ் விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ள சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ மனையின் கட்டுமானப் பணியில் 95% பூர்த்தியாகிவிட்டது என்று சொன்னதோடு பாஜக தலைவர் நட்டா அவர்கள் ஏன் நிறுத்திக் கொண்டார்.

பூர்த்தியான பகுதியில் டாக்டர்கள் நாள் தோறும் 1000 புற நோயாளிகளைக் கவனிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கலாமே பூர்த்தியான இன்னொரு பகுதியில் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன என்று சொல்லியிருக்கலாமே.பூர்த்தியான இன்னொரு பகுதியில் மருந்தகம் செயல்பட்டு தோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன என்று சொல்லியிருக்கலாமே? என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via