முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா சென்றார்

by Staff / 01-04-2023 01:47:53pm
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா சென்றார்

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா சென்றார். கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க ஒடுக்கப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து 1924-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. தீண்டாமைக்கு எதிரான இப்போராட்டத்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இந்நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, சிறப்பாக கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்க கொச்சி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்ப்பளிக்கப்பட்டது. மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரையாற்றவுள்ளார்.

 

Tags :

Share via

More stories