ரயில் தண்டவாளத்தில் தூங்கிய ரவுடி சரக்கு ரயில் மோதி பலி

by Staff / 10-06-2022 04:38:05pm
ரயில் தண்டவாளத்தில் தூங்கிய ரவுடி சரக்கு ரயில் மோதி பலி

தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலம் கீழே சரக்கு ரயிலில் அடிபட்டு மூன்று பேர் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பணகுடியை சார்ந்த குழந்தை துரை மகன் ஜெபசிங் (27) என்பவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதைத்தொடர்ந்து ரயிலில் அடிபட்டு கிடந்த இருவரது உடலை மீட்ட ரயில்வே இருப்பு பாதை போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் மது போதையில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரிய வந்தது.இதில் மூக்கில் பலத்த காயத்துடன் அடிபட்டு இறந்து கிடந்த திருவிக நகரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரது மகன் மாரிமுத்து (23) என்பதும் இவர் மீது தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளது. இதுதொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. அவருடன் தூத்துக்குடி பசும்பொன் நகரைச் சார்ந்த காளிபாண்டி என்பவரது மகன் மாரிமுத்து என்பவரும் மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து உறங்கி யுள்ளார். அவரது கழுத்தின் மேல் ரயில் ஏறியதில் அவரது கழுத்து துண்டானது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அவரும் பலியானார்.இவர்கள் மூன்று பேரும்  நேற்று இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இரவு 10 மணி அளவில் பாலத்தின் அடியில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்பொழுது மதுபோதை அதிகமானதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் எழுந்திருக்க முடியாமல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கியது தெரியவந்தது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஆந்திரா செல்லும் நூல் வித் சரக்கு ரயிலில் இவர்கள் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் மாரிமுத்து என்ற பெயருடைய இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெப சிங் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து ரயில்வே இருப்புப்பாதை ஆய்வாளர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via