கொரியர் தபால் மூலம் போதைப் பொருட்கள் கடத்தல்.-காவல்துறை நிறுவன உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு.

by Editor / 03-12-2021 03:15:13pm
கொரியர் தபால் மூலம் போதைப் பொருட்கள் கடத்தல்.-காவல்துறை நிறுவன  உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு.

சென்னையில் கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் பொருட்டு   கூரியர் நிறுவன உரிமையாளர்களுக்கு காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
 போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை மூலம் "டிரைவ் அகைன்ஸ்ட் டிரக்ஸ்"  என்ற பெயரில்   நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
அதன் ஒரு பகுதியாக தனியார் தபால் சேவையான கொரியர்  மற்றும் பார்சல் சேவைகள் மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கொரியர்  நிறுவன உரிமையாளர்களுக்கு காவல் துறை  புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக பார்சல்கள் பதிவு செய்யும்போது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரின் முகவரி, அடையாள ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே பார்சல்கள் பதிவு செய்யப்பட வேண்டும்,
உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் அனுப்பும்போது அனுப்புனரின் புகைப்படத்துடன் கூடிய விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via