கொரோனா நோயாளிகளுக்கான   கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர்

by Editor / 24-07-2021 07:30:03pm
கொரோனா நோயாளிகளுக்கான   கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர்

 

 கொரோனா வைரஸின் தாக்கம்காரணமாக நாளுக்கு நாள்  உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது.


கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் தான் அதிக அளவு ஏற்படுகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பயன்படும் வகையில் தற்போது கேரளாவில் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள கொல்லத்தை மையமாகக் கொண்ட ஏரோசில் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் ஆக்சி செக்யூர் பூஸ்டர் எனும் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு இருக்குமாம், இந்த ஒரு சிலிண்டர் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக் கொள்ளலாம். 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டர் வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி, நாம் பயணம் செய்யும் போது கூட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வண்ணம் இருக்குமாம். முக கவசம் போல சிலிண்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி எளிதில் சுவாசிக்கும் வகையில் இந்த கையடக்க சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலிண்டரை ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பயன்படுத்தினால் உடனடியாக நிவாரணம் பெறலாம் எனவும் இந்த கையடக்க ஆக்கிஜான் சிலிண்டரை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo