GOOD TUCH - BAD TUCH மூலம் சிக்கிய முதியவர் போக்சோவில் கைது

by Staff / 01-09-2024 05:09:25pm
GOOD TUCH - BAD TUCH மூலம் சிக்கிய முதியவர் போக்சோவில் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகளுக்கு GOOD TUCH - BAD TUCH குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், முதியவர் ஒருவர் தன்னிடம் BAD TUCH செய்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும், பெற்றோருக்கும் தகவல் அளித்தனர். இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக, பாப்பா ஊரணியை சேர்ந்த முத்து முனியாண்டி என்ற முதியவரை போக்சோவில் கைது செய்தனர்.

 

Tags :

Share via