தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

by Staff / 20-11-2023 02:28:39pm
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது:  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்தது.இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்பபட்டிருக்கிறார். நானும் அந்த மருத்துவ நிர்வாகத்தோடு பேசினேன்.விஜயகாந்தின் உடல்நலம் சீராக இருக்கிறது. இன்று காலையிலும் பேசினேன். அவர் நன்றாக இருக்கிறார். ஐசியுவில் இருக்கிறாரே தவிர, அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது என்றார்.

 

Tags :

Share via