நிறைய தண்ணீா் பருகுகங்கள்

by Admin / 25-05-2023 06:31:43am
 நிறைய தண்ணீா் பருகுகங்கள்

வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதின் காரணமாக உண்ணும் உணவிலும் பழங்களிலும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் .பலாப்பழம், அண்ணாச்சி பழம்[ பைனாப்பிள்], பேரிச்சை பழம், மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டை. சிக்கன் அறவே தவிர்த்து விடுங்கள். மீன் உணவை சாப்பிடலாம். பாதுகாப்பானது . கூடுமையான  வரை இறைச்சியை தவிர்த்து விடுங்கள். ஐஸ் போடாத பழ ரசத்தை பருகுங்கள். வெயிலில் வெளியே புறப்பட்டு சென்றிருந்தீர்கள்  என்றால், இளைப்பாறுவதற்கு முன்னால் ஐஸ் போட்ட குளிர் பானங்களை தவிருங்கள். ஜலதோஷம் பிடித்துக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்கு கூடுமானவரை அவிக்கப்பட்ட உணவுகளை கொடுங்கள். எளிதில் ஜீரணிக்காத  எண்ணெய் அதிகம் உள்ள ,பொறிக்கப்பட்ட  உணவுகள் குழந்தைகளுக்கு அஜீரணக் கோளாறு உருவாக்கும். நிறைய தண்ணீா் பருகுகங்கள்.மனித உடலில் 80 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும், செல் திசுக்களும் சரியாக செயல்படுவதற்கு உதவுகிறது. அதனால் தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானதாகிறது. தினமும் குறைந்தபட்சம் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது..அதனால் வயது முதிர்ந்தவர்களும் குழந்தைகளும்  உணவு விஷயத்தில் அக்கறையோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 நிறைய தண்ணீா் பருகுகங்கள்
 

Tags :

Share via