பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில்அனுமதி.

by Editor / 29-09-2023 11:57:21pm
பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில்அனுமதி.

மேற்கு சைதாப்பேட்டையின் ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின்   மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில், மேற்கு சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கின்  மேற்கூரை,பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு  தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்திற்கு, 5  தீயணைப்பு வாகனங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு  வீரர்கள் விரைந்துவந்து இடிபாடுகளில் சிக்கியநபர்களை பத்திரமாக மீட்டனர்.இதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த துயர சம்பவத்தில் காயம் பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 13 பேர் சென்னை கிண்டி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்ற்னர்.

 

Tags : பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில்அனுமதி.

Share via

More stories

Logo