புது தில்லியில் இரண்டு நாள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை -உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இன்று புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இரண்டு நாள் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில முகமைகள் இணைந்து செயல்படுவதற்கான ஒட்டுமொத்த அரசாங்க அணுகுமுறையை உருவாக்குவதே இம்மான் நாட்டின் நோக்கமாகும் .மூத்த காவல்துறை அதிகாரிகள், மாநிலங்களின் பயங்கரவாத எதிர்ப்பு படை தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பயங்கரவாத நிதி உதவியை தடுத்தல், இணைய வழி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாத சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது..
Tags :


















