இந்தியர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரிக்கு விண்ணப்பிக்க முடியாது
இந்தியர்கள் மூன்று ஆண்டுகள் அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரிக்கு விண்ணப்பிக்க முடியாது .கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதால் பன்முகத்தன்மை விசா திட்டம் (Diversity Visa Lottery) என்பதுகுடியேற்ற விகிதம் குறைவாக உள்ள நாடுகளின் குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்த வரம்பைத் தாண்டியிருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 50,000க்கும் குறைவான நபர்களை அமெரிக்காவிற்கு அனுப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த லாட்டரி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியா ,இந்த வரம்பை பல ஆண்டுகளாகத் தாண்டிவிட்டதால்,கிரீன் கார்டு லாட்டரிக்கு [குடியுரிமை அட்டை ] தகுதி பெறாது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், அமெரிக்காவில் பல்வேறு நாட்டைச்சோ்ந்தவர்கள் குடியேறவழிவகுப்பதாகும்.
Tags :



















