கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

by Editor / 23-08-2022 04:09:45pm
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது டம்டம் பாறை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்து பிரேக் அடித்தால் பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை அடுத்து பேருந்துக்கு உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்த சிலர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories