ஈரானின் இஸ்லாமிய  புரட்சிகர பாதுகாப்புப் படையின் அலி முகமது நைனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

by Admin / 21-03-2026 01:00:59am
ஈரானின் இஸ்லாமிய  புரட்சிகர பாதுகாப்புப் படையின் அலி முகமது நைனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஈரானின் இஸ்லாமிய  புரட்சிகர பாதுகாப்புப் படையின்  செய்தித் தொடர்பாளரும்  மூத்த தலைவருமான  அலி முகமது நைனி அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய  கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் டெஹ்ரான் - கராஜ்  பகுதிகளில் உள்ள  கட்டளை மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
 ஈரானின் அரசு ஊடகம்  இந்த மரணத்தை உறுதிப்படுத்தியது. இஸ்ரேலிய ராணுவமும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து, ஈரானின் ஏவுகணை உற்பத்தி எத்தகைய போர்ச் சூழலிலும் தொடரும் என அவர் சூளுரைத்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.அலி முகமது நைனி IRGC-ன் உளவியல் போர்முறை மற்றும் மென்சக்தி நிபுணராகக் கருதப்பட்டவர். கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்ட நான்காவது தலைவராவார்.

 

Tags :

Share via

More stories

Logo