தூத்துக்குடி: 2 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

by Editor / 12-10-2021 07:48:04pm
தூத்துக்குடி: 2 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மராஜபுரம்  பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பிரம்மராஜன் (55) என்பவர் ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் அருணாச்சலம் (45) என்பவரிடம் வட்டிக்கு பணம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் பிரம்மராஜனிடம் கொடுத்த கடனுக்கு அதிக வட்டிக்கு பணம் கேட்டு கடந்த 13.09.2021 அன்று பிரம்மராஜனின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


 இதனால் மனமுடைந்த பிரம்மராஜன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரம்மராஜனின் மனைவி ரேவதி (47) அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான அருணாச்சலம் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் திரு சந்தீஸ், இ.கா.ப அவர்களும்,கடந்த 20.09.2021 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் செய்துங்கநல்லூர் மேல தூதுகுழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் உய்காட்டன் (23) என்பவர் ஒரு நபரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து உய்காட்டானை கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் எதிரியான உய்காட்டான் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.


மேற்படி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.


அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் . கே. செந்தில் ராஜ்ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் 1) அருணாச்சலம் மற்றும் செய்துங்கநல்லூர் மேல தூதுகுழியைச் சேர்ந்த முருகன் மகன் 2) உய்காட்டான் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர், 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via