துப்பட்டாவால் கட்டிப்போட்டு மாணவி பலாத்காரம்

by Staff / 16-05-2023 11:53:19am
துப்பட்டாவால் கட்டிப்போட்டு மாணவி பலாத்காரம்

கடலூர்: ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த பாலக்குமார் (25), அங்குள்ள 10ஆம் வகுப்பு மாணவியின் வீட்டுக்கு சென்று, படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்றும், அதனை எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு வருமாறும் கூறியுள்ளார். பாலக்குமாரின் வீட்டுக்கு சென்ற மாணவியை ஒரு அறையில் வைத்து பூட்டி, துப்பட்டாவால் கையை கட்டியுள்ளார். தொடர்ந்து வாயை பொத்தி, பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. அங்கிருந்து வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே மருத்துவமனைக்கு சென்ற நிலையில், டாக்டர்கள் மாணவிக்கு சிகிச்சை அளித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பாலக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories