கள்ளக்குறிச்சிகல்வராயன் மலையில் பலத்த காற்றுடன் கன மழை.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி 15.4 செ.மீ. மாடாம்பூண்டி 13.1 செ.மீ. திருப்பாலப்பந்தல் 12.2 செ.மீ. கலையநல்லூர் 12.1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.இதேபோல் சூளாங்குறிச்சி 10 செ.மீ. விருகாவூர் 10.5 செ.மீ. வடசிறுவள்ளூர் 11 செ.மீ. அரியூர் 11.5 செ.மீ. மணலூர்பேட்டை 11.5 செ.மீ, திருக்கோவிலூர் 11.7 செ.மீ. வேங்கூர் 11.4 செ.மீ. யு.கீரனூர் 10.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.கல்வராயன் மலையில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக, கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கோமுகி அணையில் இருந்து இன்று காலை 7 மணி முதல் விநாடிக்கு 800 கன அடி நீர் உபரி நீராக ஆற்றின் மிகை போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags : கள்ளக்குறிச்சிகல்வராயன் மலையில் பலத்த காற்றுடன் கன மழை.