பசுவை கடத்தினால் என்கவுண்டர்.. அமைச்சர் எச்சரிக்கை

by Staff / 04-02-2025 03:33:17pm
பசுவை கடத்தினால் என்கவுண்டர்.. அமைச்சர் எச்சரிக்கை

பசு கடத்தலில் ஈடுபடுபவர்களை பார்த்த இடத்திலேயே சுட்டுத் தள்ள போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளேன் கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் மங்கலா சுப்ப வைத்யா, "பசுக்களைப் பாதுகாக்க தேவைப்பட்டால் துப்பாக்கியைப் பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. பசு கடத்தல் மற்றும் வதை தொடர்ந்தால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை பார்த்த இடத்தில் சுட்டுத் தள்ள உத்தரவிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via