பட்டியலின இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்.
மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் கடந்த சனிக்கிழமை சீருடை அணியாமல் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில் அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில் விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீஸார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
Tags : பட்டியலின இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சஸ்பென்ட்