குட்கா கடத்தியதாக மூன்று பேர் கைது.65 கிலோ குட்கா பறிமுதல்.

புளியங்குடி பகுதியில் விற்பனைக்காக குட்கா கடத்தியதாக மூன்று பேர் கைது.65 கிலோ குட்கா பறிமுதல்.....
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி பகுதியில் விற்பனைக்காக கணேஷ் புகையிலை உள்ளிட்ட குட்கா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதனை தொடர்ந்து புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். உடனே அப்பகுதியில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்த பொழுது அதில் 65 கிலோ கணேஷ் புகையிலை உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விற்பனைக்காக கடத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதியை சேர்ந்த செல்லச்சாமி(என்ற) குட்டி, மாரியப்பன், கருப்பசாமி ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மூன்று பேரும் விற்பனைக்காக கணேஷ் புகையிலை உள்ளிட்ட குட்கா கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் புளியங்குடி பகுதியில் விற்பனைக்காக 65 கிலோ குட்கா கடத்தலில் ஈடுப்பட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Tags : குட்கா கடத்தியதாக மூன்று பேர் கைது.65 கிலோ குட்கா பறிமுதல்.