அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை 14 விமானசேவையில் தாமதம்.

by Staff / 16-09-2025 09:15:29am
அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை  14 விமானசேவையில் தாமதம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.16) அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக விமான நிலையத்தில், விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து தாய்லாந்து, துபாய், கத்தார், லண்டன் விமானங்கள் தாமதமாக கிளம்பின. மொத்தம் 14 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
 

 

Tags : அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை 14 விமானசேவையில் தாமதம்.

Share via

More stories