சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வலியுறுத்தல்
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். 'மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழாவில், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு, கவுரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என, ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்து உள்ளார். நவம்பர், 2ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலையில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவில், பல்கலை வேந்தரான ஆளுநர், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :