பங்காரு அடிகளாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி

by Staff / 20-10-2023 11:47:16am
பங்காரு அடிகளாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி

மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்பால் காலமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கு இன்று அரசு மரியாதையுடன் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். அவரது உடலுக்கு அஞ்சரலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள், மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories