கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

by Editor / 05-06-2026 12:20:24pm
கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழக்காவனூர் பகுதியில் உள்ள கண்மாயில் 15 வயது சிறுவன் அஸ்வின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழச்சிவல்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்ன, கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo