54 லட்சம் ட்விட்டர் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு
54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தரவுகளை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்துள்ளனர். பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு ஹேக்கர்களின் மன்றங்களில் பதிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் டேட்டா சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கியதாக செய்தி வெளியான சில நாட்களிலேயே ட்விட்டர் டேட்டா ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. வெவ்வேறு வகையான பயன்பாட்டு வலைதளங்களை பயன்படுத்தி பயனர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டதாகத் தெரிகிறது.
Tags :